‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

1998ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சல்மான்கான் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது அங்கு 'சிங்காரா' என்ற அரிய வகை மானை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டார். அவர் உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீண்ட நாட்களாக ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சல்மான்கான் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கு மீண்டும் தூசு தட்டப்பட்டு இருக்கிறது. அடுத்த மாதம் (செப்டம்பர்) 22ம் தேதி இந்த வழக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கு சில மாதங்களில் முடிந்துவிடும் என்றும் சல்மான்கானுக்கு விதிக்கப்பட்ட தண்டணை குறைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே உடல்நலக்குறைவு, கொலை மிரட்டல் பிரச்னைகளுக்கு இடையில் இந்த வழக்கு சல்மானுக்கு மேலும் ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.




