சோஷியல் மீடியாவில் திடீரென வைரலான 'கிரிஜா ஓக் காட்போலி' | ஹீரோனு சொல்லாதீங்க.. கதைநாயகன்னு கூப்பிடுங்க: முனிஸ்காந்த் கெஞ்சல் | திடீரென உயரும் 'தளபதி கச்சேரி' பாடலின் 'வியூஸ்' | ப்ரூஸ் லீ படத்தின் 'இன்ஸ்பிரேஷன்' தான் 'சிவா' | தமிழ் மார்க்கெட்டை குறி வைக்கும் ஸ்ரீலீலா, பாக்யஸ்ரீ | தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு |

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஆலியா பட், நடிகரான ரன்பீர் சிங் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். தங்களது குடும்பத்தாருடன் வசிக்க மும்பை, பாந்த்ரா மேற்குப் பகுதியில் 250 கோடி ரூபாய் செலவில் கனவு இல்லம் ஒன்றை அவர்கள் கட்டி வருகிறார்கள். அதன் வேலைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு ஆலியா பட் அவரது மாமியார் நீத்து கபூர் உடன் வீட்டை மேற்பார்வையிட்டுள்ளார். விரைவில் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியை நடத்துவதற்காகவே அவர்கள் சென்று விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மிகவும் ஆடம்பரமாக ஆறு அடுக்கு மாடியாக அந்த வீடு கட்டப்பட்டு வருகிறது. அந்த வீட்டிற்கு ரன்பீர் பாட்டி கிருஷ்ணா ராஜ் கபூர் நினைவாக கிருஷ்ணா ராஜ் என்ற பெயரை வைத்துள்ளார்களாம். மாடர்னாகவும், கலாச்சாரத்துடனும் அந்த வீட்டை கடந்த சில வருடங்களாக பார்த்துப் பார்த்து கட்டி வருகிறார்கள்.