கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஆர்எஸ் பிரசன்னா இயக்கத்தில், அமீர்கான், ஜெனிலியா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் ஜூன் 20ம் தேதி வெளியான ஹிந்தித் திரைப்படம் 'சித்தாரே ஜமீன் பர்'. இப்படம் தியேட்டர் வசூலில் சுமார் 250 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடாமல் இன்று முதல் யு டியுப் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து? ஆஸ்திரேலியா, உள்ளிட்ட வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் இப்படத்தை யு டியூப் தளத்தில் கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.
படத்தைப் பார்க்க ரூ.100 கட்டணம். கட்டணம் செலுத்திய 30 நாட்களுக்குள் படத்தை ஆரம்பித்துப் பார்த்துவிட வேண்டும். பார்க்க ஆரம்பித்துவிட்டால் 48 மணி நேரங்களுக்குள் பார்த்து முடித்துவிட வேண்டும். இந்த நிபந்தனைகளுடன் படம் தற்போது யு டியூப் தளத்தில் உள்ளது.
ஓடிடி தளங்களில் படம் வெளியாகி இருந்தால், எந்தத் தளத்தில் வெளியாகிறதோ அதில் ரசிகர்கள் கணக்கு வைத்திருந்தால் பார்க்க முடியும். ஆனால், ஓடிடி தளங்கள் வருவதற்கு முன்பு யு டியூப் தளத்தில் இப்படி கட்டணம் செலுத்தி பார்க்கும் முறை இருந்தது. ஓடிடி தளங்கள் வந்த பின்பு அதைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை போய்விட்டது. அதனால், அந்த முறையை தற்போது மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள்.
இதன் மூலம் யு டியூப் தளமும், தயாரிப்பு நிறுவனமும் பணத்தை பங்கு போட்டுக் கொள்ளும் விதத்தில் ஒப்பந்தம் செய்திருப்பார்கள். இந்த விதத்தில் தயாரிப்பாளர்களுக்கும் கூடுதல் பணம் கிடைக்கலாம். ஓடிடி தளங்களில் கணக்கு வைத்தில்லாதவர்களும் யு டியூப் தளத்தைப் பார்க்கும் வசதி இருக்கிறது. எனவே, அமீர்கான் மீண்டும் ஆரம்பித்து வைத்துள்ள இந்த முறையை மற்றவர்களும் பயன்படுத்துவார்களா என்பது இனிமேல்தான் தெரிய வரும்.