'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் வெளியாகும் படங்கள் பான் இந்தியா படங்கள் என்ற அடையாளத்துடன்தான் வெளியாகின்றன. ஒரிஜனலாக அந்தப் படங்கள் எந்த மொழியில் தயாராகி உள்ளதோ அதற்குத்தான் அதிக பிரபலமும் கிடைக்கிறது. மற்ற மொழிகளில் குறிப்பாக ஹிந்தியில் குறிப்பிடத்தக்க அளவு பார்க்கப்படுகிறது. இதர மொழிகளில் படம் நன்றாக இருந்தால் மட்டுமே வரவேற்பு. அந்தப் படங்களுக்கான டீசர், டிரைலர் ஆகியவற்றிற்கும் இதே நிலைதான்.
கடந்த சில நாட்களில் தெலுங்கில் தயாரான பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோக்கள், யு டியூப் தளங்கள், இதர சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் போட்டி போட்டு பார்வைகளைப் பெற்று வருகின்றன. இவற்றை வைத்துத்தான் அந்தப் படங்களுக்கான வரவேற்பை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்க முடியும்.
விஷ்ணு மஞ்சு நாயகனாக நடிக்க இந்தியத் திரையுலகத்தின் முக்கிய நட்சத்திரங்கள் சிலர் முக்கிய கதாபாத்திரங்களிலும், சிறப்புத் தோற்றத்திலும் நடிக்கும் 'கண்ணப்பா' படத்தின் டிரைலர் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் இந்தப் படத்திற்கான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். சரித்திர ஆன்மீகக் கதை என்பதால் இந்தப் படம் மீது எதிர்பார்ப்பு உள்ளது.
தனுஷ், ராஷ்மிகா, நாகார்ஜுனா நடிக்க தெலுங்கு, தமிழில் தயாராகி உள்ள 'குபேரா' படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த வாரமே வெளியாக உள்ளதால் இந்தப் படத்தின் டிரைலர் பார்வைகள் படத்திற்கு மிக முக்கியமானது. அதனால், தெலுங்குத் திரையுலகத்தின் பிரபலங்கள் பலரையும் இந்த டிரைலருக்கு வாழ்த்து சொல்லச் சொல்லி கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.
அடுத்து பான் இந்தியா பிரபலமாகப் பேசப்படும் பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' டீசர் நேற்று வெளியிடப்பட்டது. வழக்கமான ஆக்ஷன், அதிரடி, சரித்திரக் கதையாக இல்லாமல் பேய், பேண்டஸி வகைப் படமாக இந்தப் படம் இருக்கும் என டீசரைப் பார்த்ததும் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்ற மொழி சினிமா ரசிகர்களிடம் பிரபலமில்லாத இயக்குனர் மாருதி, பிரபாஸை எப்படி கையாண்டிருப்பார் என்ற கேள்வியும் டீசர் மூலம் எழுந்துள்ளது. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்போதைக்கு இந்த மூன்று முன்னோட்ட வீடியோக்களும் போட்டியில் உள்ளன. இவை எப்படி வேண்டுமானாலும் அமையலாம், படத்தின் வரவேற்பும், வசூலும்தான் இவற்றை விட மிக முக்கியம்.