இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
பார்க்கிங் படத்துக்கு சிறந்த தமிழ்ப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ஆகிய 3 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து பேசியுள்ள படத்தின் தயாரிப்பாளர் சுதன், ‛‛இந்த படம் ஸ்கிரிப்ட் ஆக இருக்கும்போதே பல விருதுகள், அங்கீகாரத்தை பெறும் என நினைத்தோம். அது நடந்துவிட்டது. 3 விருதுகள் மகிழ்ச்சி, படக்குழுவினர் நோக்கம், உழைப்புக்கு கிடைத்த வெற்றி'' என்கிறார்.
இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பேசுகையில், ‛‛நாம் அன்றாடம் பார்க்கிற பார்க்கிங் பிரச்னையால் ஏற்படுகிற ஈகோ, சண்டையை மனதில் வைத்து இந்த கதையை உருவாக்கினேன். படம் நிறைய பேருக்கு பிடித்து இருந்தது. தங்கள் வாழ்வில் இப்படிப்பட்ட ஈகோ நடந்து இருக்கிறது. சில சண்டைகளை பார்த்து இருக்கிறோம் என பீல் செய்தனர். படம கமர்ஷியலாக வெற்றி பெற்றது. இப்போது 3 தேசிய விருதுகள் கிடைத்து இருக்கிறது. குறிப்பாக, எம்.எஸ்.பாஸ்கரின் இத்தனை ஆண்டுகால உழைப்புக்கு எங்கள் படத்தில் விருது கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி என்றார்.
ஹீரோ ஹரீஷ் கல்யாண் பேசுகையில், ‛‛எங்கள் படத்துக்கு 3 விருதுகளை எதிர்பார்க்கவில்லை. சினிமாவில் வெற்றி, தோல்வி என அனைத்தையும் பார்த்துவிட்டேன். இப்போது கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறேன். இந்த நேரத்தில் தயாரிப்பாளர், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள், ரசிகர்கள், என் குடும்பத்தினருக்கு நன்றி'' என்றார்.
எம்.எஸ்.பாஸ்கர் பேசுகையில், ''என்னால் போனை அட்டென்ட் செய்ய முடியவில்லை அவ்வளவு போன் வந்து கொண்டே இருக்கிறது. இது மறக்க முடியாத விஷயம். இந்த விருதை பெற்றுக் கொடுத்த இயக்குனர், தயாரிப்பாளர், படக்குழுவினர், விருது குழுவுக்கு நன்றி. இந்த விருதை என்னை மகன் போல பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அர்ப்பணிக்கிறேன்' என்றார்.
வெளியூரில் இருக்கும் ஜி.வி.பிரகாசும் வாத்தி படக்குழு, அந்த பட ஹீரோ தனுசுக்கு, ரசிகர்கள், தனது டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.