‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

'பாகுபலி' படத்திற்குப் பிறகு பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். அதன்பின் அவர் நடிக்கும் படங்களின் டீசர், டிரைலர் ஆகியவை வெளிவந்தால் அவை யு டியூப் தளங்களில் அதிகப் பார்வைகளைப் பெறுபவையாக இருந்தன. தொடர்ந்து பிளாக் பஸ்டர் ஹிட்களைத் தரவில்லை என்றாலும் அவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் 1000 கோடி வசூலைக் கடந்தது.
பிரபாஸ் தற்போது நடித்து வரும் 'தி ராஜா சாப்' படத்தின் டீசர் நேற்று 5 மொழிகளில் வெளியானது. 24 மணி நேரத்தில் அந்த டீசர்கள் புதிய சாதனையைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒட்டு மொத்தமாகவும் அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து 31 மில்லியன் பார்வைகளை மட்டுமே பெற்றுள்ளது.
தெலுங்கில் 13.8 மில்லியன், ஹிந்தியில் 10 மில்லியன், தமிழில் 2.8 மில்லியன், மலையாளத்தில் 2.3 மில்லியன், கன்னடத்தில் 2.2 மில்லியன் என 24 மணி நேரத்தில் பார்வைகளைப் பெற்றுள்ளன.
பிரபாஸ் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'ராதே ஷ்யாம்' டீசர் 24 மணி நேரத்தில் 42 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. தெலுங்கு டீசர் மட்டும் என்று எடுத்துக் கொண்டாலும் 'தி ராஜா சாப்' டீசர், பிரபாஸின் 'சாஹோ' டீசரின் 24 மணி நேர பார்வையான 12.9 மில்லியனை விட சற்றே அதிகமான பார்வைகளையே பெற்றுள்ளது.
பேய், பேண்டஸி என இருக்கும் 'தி ராஜா சாப்' டீசர் பிரபாஸுக்கு மாறுபட்ட படமாக அமையுமா என்பது படம் வெளிவந்த பிறகே தெரியும்.