'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 50வது பிறந்த நாளையொட்டி சென்னையில் பெரிய இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் ஏராளமான திரைப்பிரபலங்கள் பங்கேற்க உள்ளனர். இது குறித்து பேசிய எழுத்தாளர் பவா செல்லத்துரை, ‛‛நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காது. சுவையான அதை அவர் ஏன் விரும்பவில்லை என்பதற்கு காரணம் இருக்கிறது. சின்ன வயதில் அவரது அம்மாவை இழந்தவர். அம்மா மறைவையொட்டி பள்ளியில் இருந்து அவரை வீட்டுக்கு அழைத்து வந்து இருக்கிறார்கள். முத்துக்குமார் அழக்கூடாது என்பதற்காக அந்த வழியாக சென்ற லாரியில் இருந்து கீழே விழுந்த கரும்பை உடைத்து கொடுத்து இருக்கிறார்கள். அதை சுவைத்துக் கொண்டே அம்மா உடலை பார்த்து இருக்கிறார் நா.முத்துக்குமார். அதன்பின் கரும்பை பார்க்கும் போதெல்லாம், அவருக்கு அம்மா நினைவு வந்து இருக்கிறது. அதனால் அவர் கரும்பு சாப்பிடுவதில்லை என்று புது தகவல் சொன்னார் பவா சொல்லத்துரை. பெரும்பாலும் அவர் பாடல்களை எழுத சென்னையில் இருந்து காரில் ஆம்பூர் செல்வார். அங்கே பிரியாணி சாப்பிட்டு விட்டு திரும்புவார். அதற்குள் பாடல் எழுதிவிடுவார் என அவர் நண்பர்கள் பகிர்ந்தனர்.