ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

கடந்த 2002ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் காதலர் தினத்தை ஒட்டி வருகிற பிப்ரவரி 13ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இது குறித்த போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இந்த மௌனம் பேசியதே படத்தில் தான் பேசி நடித்த ஒரு வசனத்தை மீண்டும் பேசி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் சூர்யா. அதோடு, இந்த படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களையும் அதில் பகிர்ந்துள்ள சூர்யா, ரசிகர்களுடன் அமர்ந்து இப்படத்தை தான் பார்க்க விரும்புவதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
ஏற்கனவே ரஜினி, கமல், விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் சூப்பர் ஹிட் படங்கள் மீண்டும் வெளியாகி வசூல் சாதனை செய்து வரும் நிலையில் சூர்யாவின் இந்த மௌனம் பேசியதே படமும் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வசூல் சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




