பிளாஷ்பேக் : படம் பார்க்கும் பெண்களுக்கு குடம் பரிசு | பிளாஷ்பேக் : 2 ஆங்கில படங்களை தழுவி உருவான 'தங்கமலை ரகசியம்' | யார் ஆரம்பித்தது என தெரியவில்லை, பயமாக உள்ளது : மிருணாள் தாகூர் | 'டாக்சிக்' வியாபாரம், வங்கிக் கணக்கு வெளியிடுகிறேன் : தில் ராஜு | முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் |

மதராசபட்டினம், கிரிடம், தெய்வத்திருமகள், சைவம், தாண்டவம் போன்ற படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். இவர் இயக்கத்தில் வெளியான தேவி 2, தலைவி, மிஷன் சாப்டர் 1 போன்ற படங்கள் வரவேற்பை பெறவில்லை. இவர் படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது அவர் இயக்கிய 2 படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
அதில் ஒரு படத்தில் மாதவன், கங்கனா நடித்த படமும் ஒன்று. ஏற்கனவே கங்கனாவை வைத்து தலைவி படத்தை இயக்கிய விஜய் மீண்டும் அவருடன் இணைந்து பணியாற்றுகிறார். அதேப்போன்று ஹிந்தியில் மாதவன் உடன் இரு படங்களில் நடித்த கங்கனா மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.
மேலும் புதுமுகங்கள் நடித்த ஒரு படமும் விஜய் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறதாம். இவை அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படங்கள் தவிர அனுஷ்கா நடிக்கும் ஒரு படம் , வெப்சீரிஸ் என சில புராஜக்ட்டுகளை கையில் வைத்து இருக்கிறார் ஏ.எல்.விஜய்.