வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'லக்கி பாஸ்கர்' படத்தை அடுத்து தெலுங்கில் துல்கர் சல்மான் நடித்து வரும் படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'. பவன் சாதினேனி என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்கள். கோடை விடுமுறையில் திரைக்கு வரும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ராஜ முந்திரியில் நடைபெற்று வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் தற்போது இந்த 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 41 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதவிர தற்போது மலையாளத்தில் 'ஐஎம் கேம்' என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார் துல்கர் சல்மான்.




