செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா கூட்டணியில் ஏற்கனவே சிம்மா, லெஞ்சன்ட், அகண்டா போன்ற படங்கள் வெளியாகி வெற்றி படமாக அமைந்தன. அதிலும் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகத்தை அறிவித்தனர். 14 ரீல்ஸ் ப்ளஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த பாகத்திற்கும் தமன் தான் இசையமைக்கிறார் .
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை பிராய்க்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்வில் தொடங்கினர். தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை சம்யுக்தா இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் வாத்தி மற்றும் தெலுங்கில் டெவில், விஷ்வாம்பர, பிம்பிசாரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.