சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் அவரது 69வது படத்தை கடைசி படமாக அறிவித்து நடித்து வருகிறார். பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் மேனன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி, டிஜே அருணாசலம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை கே. வி. என் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். அனிரூத் இசையமைக்கிறார்.
படத்திற்கு தலைப்பு வைக்காமலே படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியாகும் என அறிவித்துள்ளனர். படத்திற்கு விஜய் முதல் பட தலைப்பான ‛நாளைய தீர்ப்பு'-ஐ வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் மற்றொரு தகவல் ஒன்று காத்திருக்கிறது என்கிறார்கள். அதன்படி விஜய் 69 திரைப்படம் முதலில் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவித்தனர். ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட தாமதத்தால் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டு இப்போது விஜய் 69வது படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையொட்டி திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.