சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
நடிகர் விஜய் நடித்த 'தமிழன்' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் டி.இமான். இவரது இசையில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இசைத் துறையில் பல்வேறு திறமையான கலைஞர்களை தனது இசையமைப்பில் பாட வைத்து அறிமுகம் செய்து பலருக்கும் வாழ்க்கை அளித்துள்ளார். அத்துடன் இவர் பல சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.
இன்று (ஜன.,24) இவரது 42வது பிறந்தநாள். இதனையொட்டி ரசிகர்கள் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், டி.இமான் தனது பிறந்தநாளன்று தன் முழு உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனைக்கு தானமாக அளித்துள்ளார். இதனை அவர் சமூக ஊடகம் மூலமாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ''எனது பிறந்தநாளில் உங்கள் நிபந்தனையற்ற அன்புக்காக அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நாளில், சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையின் கீழ் முழு உடல் உறுப்பு தானத்திற்காக என்னைப் பதிவு செய்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தப் பதிவுடன் யூடியூப் வீடியோ லிங்க் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ''தனது இந்த செயல், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுதலாக இருக்கும் என நம்புகிறேன். என் முழு உடலையும் தானமாக அளித்து அதற்கான டோனர் கார்டையும் பெற்றுள்ளேன். நான் உயிரிழந்த பிறகும் என் உடல் யாரோ ஒருவருக்கு பயன்படும் என்றால் சந்தோஷம். நாம் இறந்த பிறகும் ஜீவிக்கலாம் என்ற அற்புதமான விஷயத்திற்கு இந்த செயல் வழிவகுக்கும்'' எனக் கூறியுள்ளார். மேலும், இன்னும் நிறைய பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முதன்முறையாக நடிகர் கமல்ஹாசன் தான் உடல் உறுப்புகளை தானம் செய்திருந்தார். அதன்பிறகு, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, விஷால், சரத்குமார், மாதவன், பிரசன்னா, சூர்யா, நடிகைகள் சமந்தா, திரிஷா, சிநேகா, காஜல் அகர்வால் உள்ளிட்டோரும் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.