சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
திரைப்பட நடிகர்களில் அபூர்வமாக சிலர் விதிவிலக்காக இருப்பார்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் வி.எஸ்.ராகவன். கே.பாலச்சந்தருடன் இணைந்து நாடங்களில் நடித்தும், இயக்கியும், எழுதியும் வந்த ராகவன், 1954ம் ஆண்டு 'வைரமாலை' என்ற படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். இந்த படத்தில் ஆர்.எஸ்.மனோகர் ஹீரோ. ராகவன் நாயகியின் தந்தை.
தனது 29வது வயதில் நடிக்க வந்தவர் முதல் படத்திலேயே அப்பாவாக நடித்தார். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த ராகவன் பெரும்பாலான படங்களில் அப்பாவாக நடித்தார், பின்னர் தனது கடைசி காலத்திலும், சின்னத்திரை தொடர்களிலும் தாத்தாவாக நடித்தார். கே.பாலச்சந்தரின் படங்களில் கொஞ்சம் நெகட்டிவ் ஷேட் உள்ள அப்பாவாக நடித்தார்.
நாடகங்களில் முன்பெல்லாம் காட்சி மாறும்போது இரண்டு பேர் வந்து திரைச்சீலையை பக்கவாட்டில் நகர்த்தி செல்வார்கள். அதை மாற்றி திரைச்சிலை மனிதர்கள் உதவியின்றி மேலிருந்து கீழே இறங்குவது போன்று மாற்றி அமைத்தவர் ராகவன். இப்படியான சின்ன சின்ன மாற்றங்களை செய்தவர். தனக்கென்று தனி குரல் வளத்தை வைத்துக் கொண்டவர். அதையே கடைசி வரை பயன்படுத்தினார். இன்னொரு குரலில் அவர் பேசியது இல்லை. மிமிக்ரி கலைஞர்களின் பால பாடமே ராகவன் மாதிரி பேசுவதுதான்.
“நான் எளிய மனிதன் எனது தேவைகள் குறைவு. எனக்கு சொத்துகளும் இல்லை. கடன்களும் இல்லை” என்பார் ராகவன். 2015ம் ஆண்டு இதே நாளில் தனது 89வது வயதில் காலமானார். அவருக்கு இன்று 10வது நினைவு நாள்.