இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2004ம் ஆண்டு திரைக்கு வந்த படம் அந்நியன். இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் அண்டங்காக்கா கொண்டக்காரி என்ற பாடலை பாடி பிரபலமானவர் சைந்தவி. ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து அனிருத், ஹரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, வித்யாசாகர் ஜி.வி. பிரகாஷ் குமார் உள்ளிட்ட பலரது இசையில் பின்னணி பாடியுள்ள சைந்தவி, சமீபத்தில் விஷால் நடித்த மார்க் ஆண்டனி படத்தில் அம்மா என்னும் மந்திரமே என்ற பாடலை பாடியிருந்தார். இந்த பாடல் பெரிய அளவில் ஹிட்டானது.
இந்த நிலையில் தற்போது பேபி அண்ட் பேபி என்ற படத்திற்காக டி. இமான் இசையில் அவர் ஒரு பாடல் பாடியிருக்கிறார். யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடல் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளாக விரைவில் வெளியாக உள்ளது. இந்த தகவலை டி.இமான் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். ரியோ ராஜ், சத்யராஜ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை பிரதாப் என்பவர் இயக்கி இருக்கிறார்.