2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குனர் செல்வராகவன் சோசியல் மீடியாவில் அவ்வப்போது சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், நாம் செய்கிற வேலை எதுவாக இருந்தாலும் அதில் கர்வமாக செய்ய வேண்டும். வேலை செய்யும் போது கடிகாரத்தை பார்க்க கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், ஒரு அலுவலகத்தில் வேலை செய்யும் போது வேலை ரொம்ப கடினமாக இருக்கிறது. வறுத்து எடுக்கிறார்கள் என்று அந்த வேலையை பற்றி புகார் சொல்வதை நிறுத்த வேண்டும். வல்லரசு நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். வல்லரசு நாடுகளில் எந்த வேலையாக இருந்தாலும் அதை கர்வத்துடன் செய்வார்கள். கர்வத்தை மண்டையில் ஏற்றிக்கொள்ள மாட்டார்கள். ஆட்டோ டிரைவர், டாக்ஸி டிரைவர் என்றால் கூட அந்த வேலையை கர்வமாக செய்ய வேண்டும்.
செய்கிற வேலையில் வெறுப்பை காட்டாமல் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். குறிப்பாக வேலை செய்யும்போது அது எப்போது முடியும் என்று கடிகாரத்தை பார்க்காமல் முழு ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். உதாரணமாக சொல்ல வேண்டுமென்றால், மலை ஏறும் போது அதன் உச்சியை பார்க்க கூடாது. அப்படி பார்த்தால் ஏறும் எண்ணமே போய்விடும். பொறுமையாக ஒவ்வொரு படியாக ஏறிச் செல்ல வேண்டும். இப்படித்தான் நாம் செய்யும் வேலைகளிலும் செயல்பட வேண்டும் என்று அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன்.