பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

பாலுமகேந்திராவின் படங்கள் அனைத்தும் அவரது சொந்த கதைகள்தான். அதன் மேக்கிங்கில் ஆங்கில படங்களின் தாக்கம் இருக்கும். ஆனால் அவர் 'மிக்கி அண்ட் மோட்' என்ற படத்தின் கதையை தழுவி எடுத்த படம் 'ரெட்டைவால் குருவி'. 1984ம் ஆண்டு வெளியான இந்த ஆங்கில படத்தை பிளாக் எட்வர்ஸ் இயக்கி இருந்தார், டியூட்லி மோர் நாயகனாகவும், அவரது இரண்டு மனைவிகளாக எமி இர்விங், ஆன் ரெய்ன்கிங் நடித்திருந்தார்கள். இரண்டு பெண்களை மணந்த ஒருவனின் வாழ்க்கையை காமெடியாக சொன்ன படம். அந்தக் காலத்திலேயே பெரும் வசூலை குவித்த படம்.
இந்த படம்தான் 'ரெட்டைவால் குருவி' ஆனது. மோகன் நாயகனாகவும், அவரது முதல் மனைவியாக அர்ச்சனாவும், இரண்டாவது மனைவியாக ராதிகாவும் நடித்தார்கள். இளையராஜாவின் பாடல்கள் படத்திற்கு வலு சேர்த்து. படமும் வெற்றி பெற்றது.