சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

குடும்ப பிரச்னை, வறுமை காரணமாக தனது 7 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட நல்லதங்காள் கதை தமிழ்நாட்டில் பிரபலம். நாட்டுப்புற ஒப்பாரி பாடல்களில் நல்லதங்காள் கதை பாடப்பட்டது. வில்லுப்பாட்டாக இசைக்கப்பட்டது. பிற்காலத்தில் சிலரால் நாடகமாகவும் நடத்தப்பட்டது.
இந்த கதை 1935ம் ஆண்டு திரைப்படமாக உருவானது. பி. வி. ராவ் இயக்கத்தில் ஏஞ்சல் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தில் எம். எஸ். தாமோதர ராவ், சி.எஸ்.ஜெயராமன், கே.ஆர். காந்திமதி பாய், பி. எஸ். சிவபாக்கியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இதே கதை 1955ம் ஆண்டு மீண்டும் உருவானது. பி.வி.கிருஷ்ண அய்யர் இயக்கினார், ஆர்.எஸ்.மனோகர், ஜி.வரலட்சுமி, ஏ.பி.நாகராஜன், சந்திரபாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மதராஸ் மூவிடோன் தயாரித்திருந்தது. இரண்டு படங்களுமே மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது 'நல்லதங்காள்' கதை மறைந்து விட்டது.




