பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகி சைந்தவியை படிக்கும் காலத்திலிருந்து காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் கடந்தாண்டு மே மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் நட்பை தொடருகின்றனர். ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவியும் பங்கேற்று பாடினார்.
இந்நிலையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் இன்று(மார்ச் 24) இருவரும் நேரில் ஆஜராகி மனு தாக்கல் செய்தனர். ஒரே காரில் வந்த ஜி.வி.பிரகாஷ், சைந்தவி ஆகியோர் சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர். அதில் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.