பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து கேட்டு சென்னை, குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அக்., 30ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். பாடகி சைந்தவியை காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்தாண்டு இவர்கள் பிரிவதாக அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தனர். மேலும் விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இதுதொடர்பான வழக்கு நடந்து வந்தது.
இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று(செப்., 25) நடந்தது. ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகினர். மன ஒத்து பிரிவதில் இருவரும் உறுதியாக உள்ளனர். அதேசமயம் மகளை சைந்தவி பார்த்துக் கொள்வதில் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என ஜிவி பிரகாஷ் நீதிபதியிடம் தெரிவித்தார். இந்நிலையில் இந்த வழக்கு மீதான தீர்ப்பு அக்., 30ல் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் அன்றைய தினம் இருவருக்கும் விவாகரத்து கிடைத்துவிடும் என தெரிகிறது.