Advertisement

சிறப்புச்செய்திகள்

ரசிகர் கொலை வழக்கு : நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடாவுக்கு முன் ஜாமீன் | நடிகை கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் சிறை செல்ல காரணமாக இருந்த இயக்குநர் மரணம் | விக்ரம் 63வது படத்தின் அறிவிப்பு வெளியானது | சினிமா வேறு, குடும்ப வாழ்க்கை வேறு… : நிரூபித்த நடிகைகள் | 2வது திருமணம் பற்றி சூசமாக தகவல் வெளியிட்ட சமந்தா | சிவகார்த்திகேயன் சம்பளம் அதிரடி உயர்வு ? | சினிமா விருது தேர்வு நடந்து வருகிறது : சென்னை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் அமைச்சர் தகவல் | தனுஷ் தொடர்ந்த வழக்கில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் | பிளாஷ்பேக்: 80 வருடங்களுக்கு முன்பே வரதட்சனை மாப்பிள்ளைகளை வேட்டையாடிய ஹீரோயின் | பிளாஷ்பேக் : லட்சுமி பிறந்தநாள் - தலைமுறைகளை தாண்டிய நடிகை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கதைகளை புனைவதால் வருத்தம்: பாடகி சைந்தவி

16 மே, 2024 - 05:57 IST
எழுத்தின் அளவு:
Saddened-by-making-up-stories:-Singer-Saindhavi


இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், பாடகி சைந்தவி ஆகியோர் 2013ல் திருமணம் செய்தனர். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். இவர்களின் 11 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. தாங்கள் இருவரும் மனம் ஒத்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். இவர்களின் பிரிவை வைத்து சமூகவலைதளங்களில் பல்வேறு விதமான கருத்துக்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இதற்கு ஜிவி பிரகாஷ், ‛‛புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொது வெளியில் விவாதிக்கப்படுவது துரதிஷ்டவசமானது. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கு அறிவார்கள். அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம். என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்'' என தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

ஆனாலும், இன்னும் சமூக வலைதளங்கள், சில யூடியூப் சேனல்கள் மற்றும் ஊடகங்களில் இருவரின் பிரிவு தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக பாடகி சைந்தவி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: ‛‛பல யூடியூப் வீடியோக்களைச் சேர்ந்தவர்கள் தாங்கள் பெற்ற செய்திகளின் அடிப்படையில் கதைகளை புனைவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. குறிப்பாக நாங்கள் 'ப்ரைவேசி'யை கோரிய பிறகும் இந்த நிலை தொடர்கிறது.

எங்கள் விவாகரத்து என்பது எந்தவொரு வெளிப்புற சக்தியாலும் நிகழ்ந்தது அல்ல. ஆதாரமற்ற முறையில் ஒருவரை மோசமாக சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முடிவு எங்கள் முன்னேற்றத்திற்காக நாங்கள் இருவரும் பரஸ்பரம் சேர்ந்து எடுத்த முடிவு. நானும் ஜி.வி.பிரகாஷூம் பள்ளிப் பருவத்தில் இருந்தே 24 வருட நண்பர்கள். அந்த நட்பை தொடர்ந்து பேணுவோம்''. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்த ஜி.வி.பிரகாஷ், ‛‛தங்களின் சொந்த அனுமானங்களின் அடிப்படையில் சேனல்கள் சொல்லும் கதைகள் உண்மைக்கு புறம்பானது. மேலும் சிலர், தங்களின் சொந்த கற்பனை மற்றும் கதைகளின் அடிப்படையில் சிலரின் குணாதியசங்களை மோசமாக சித்தரித்து குளிர் காய்கிறார்கள். இவர்களைத் தவிர எங்களின் கடினமான காலத்தில் ஆதரவளித்த மற்றவர்களுக்கு நன்றி'' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!மீண்டும் அயோத்தி மந்திர மூர்த்தி ... மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : சிம்பொனியை எழுதியிருப்பதாகவும் இளையராஜா தகவல் மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in