'சிறகடிக்க ஆசை' கோமதி ப்ரியா க்யூட் கிளிக்ஸ் | ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சியில் பாடப் போகும் சைந்தவி | டெல்னா டேவிஸின் 'ஆடுகளம்' புரோமோ ரிலீஸ்! | செலிபிரேட்டியாக இல்லாததால் சப்போர்ட் இல்லையா? -ரியா வருத்தம் | நானும் ரவுடிதான் காட்சிகளை பயன்படுத்தியும் தனுஷை தவிர்த்து மற்றவர்களுக்கு நன்றி சொன்ன நயன்தாரா | வில்லன் அவதாரம் எடுக்கிறாரா ஜெயம் ரவி? | விஜய் மகன் படத்திற்கு இசையமைக்கும் தமன்! | பிரிவு செய்தியில் ஹேஸ்டேக்: ரசிகர்கள் விமர்சனம் | குபேரா படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! | நாக சைதன்யாவிற்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி! |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜிவி பிரகாஷ்குமார். கதாநாயகனாக நடித்துக் கொண்டே இசையமைக்கும் வேலைகளையும் சிறப்பாகச் செய்து வருகிறார். அவரது இசையமைப்பில் கடந்த மாதம் வெளிவந்த 'அமரன்' படம் 300 கோடி வசூல் படமாகவும், ‛லக்கி பாஸ்கர்' ரூ.100 கோடி வசூல் படமாகவும் அமைந்துள்ளது. தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஜிவி பிரகாஷின் இசை நிகழ்ச்சி ஒன்று அடுத்த மாதம் டிசம்பர் 7ம் தேதி மலேசியாவில், கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. 'செலிபிரேஷன் ஆப் லைப்' என தலைப்பு வைத்துள்ள அந்நிகழ்ச்சியில் ஜிவியின் முன்னாள் மனைவியும் பாடகியுமான சைந்தவியும் கலந்து கொண்டு பாட உள்ளார். அது பற்றிய வீடியோ அறிவிப்பு ஒன்றையும் சைந்தவி வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பற்றி குறிப்பிடும் போது, 'ஜிவி பிரகாஷ் சார்', என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலித்து கல்யாணம் செய்து கொண்டு, ஒரு பெண் குழந்தை பெற்ற பின்பு இருவரும் பிரிவதாக கடந்த மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இருந்தாலும் பிரிவுக்குப் பின்னும் இருவரும் எந்த சிக்கலும் இல்லாமல் ஒரு இசை நிகழ்ச்சியில் ஒன்றாகக் கலந்து கொள்ளும் அளவிற்கு புரிதலுடன் இருப்பது அவர்களுடைய பக்குவத்தைக் காட்டுவதாக உள்ளது. இது பற்றி ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகிறார்கள். ஜிவியின் இசையில் சினிமாவிலும் சைந்தவி தொடர்ந்து பாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிவி பிரகாஷின் தாய் மாமாவான ஏஆர் ரஹ்மான் - சாய்ரா இருவரும் பிரிவதாக இரண்டு தினங்களுக்கு முன்புதான் அறிவிப்பு வெளியிட்டனர்.