தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு.. தயாரிப்பாளர் தகவல்! | விஷாலுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள்! | பிரேம் குமார், பஹத் பாசில் படம்... "இன்னொரு ஆவேசம்" தயாரிப்பாளர் தந்த சூப்பர் அப்டேட்! | அருள்நிதி, முத்தையா கூட்டணியில் ‛ராம்போ'.. புதிய பட அறிவிப்பு! | ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் வெளியீட்டை தள்ளி வைக்கும் விஜய்! | ‛காந்தாரா: சாப்டர் 1' படத்திற்காக 3 ஆண்டுகள் அர்ப்பணிப்பு: ரிஷப் ஷெட்டி | கல்கி -2 படத்தில் தீபிகா படுகோனேவுக்கு பதிலாக இணையும் சாய் பல்லவி! | புலம்பும் புயல் காமெடியன் |
ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேம் சேஞ்சர்'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக ஜனவரி 10ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சியை ஆந்திர மாநில தலைநகரான அமராவதி நகரில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தெலுங்குத் திரைப்படங்களுக்கான நிகழ்ச்சிகளை ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள பல முக்கிய ஊர்களில் நடத்துவது வழக்கம்.
ஆந்திரா மாநில சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கூட்டணி வென்ற பிறகு பெரிய திரைப்பட விழாக்கள் இன்னும் நடக்கவில்லை. தற்போது ஆந்திர துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவியின் மகன் தான் ராம் சரண் என்பதால் அமராவதியில் விழா நடத்தினால் ஆந்திர ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைவார்கள் என படக்குழு முடிவெடுத்துள்ளதாம். அதோடு பவன் கல்யாணையும் நிகழ்ச்சிக்கு அழைத்துள்ளதாகவும் தெரிகிறது.
துணை முதல்வராகப் பதவியேற்ற பின் பவன் கல்யாண் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுவாக இருக்கலாம். விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகலாம்.