ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
மணிகண்டன் நடிப்பில் வெளியான 'குடும்பஸ்தன்' படம் 50 நாட்களை கடந்து இன்னும் சில தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கின்றன. 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இப்படத்தின் வெற்றியால் மணிகண்டன் பெரும்மகிழ்ச்சியில் உள்ளார். அவர் கடைசியாக நடித்த 'குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன்' ஆகிய 3 படங்களுமே 50 நாட்களை கடந்து ஓடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனது 'எக்ஸ்' தளத்தில் மணிகண்டன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை. மக்களிடமிருந்து பெற்ற அன்பை வெளிப்படுத்த வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுகிறேன். ஒரு சிறிய படத்தினை 50 நாட்கள் தியேட்டர்களில் கொண்டாடப்படுவது மிகப்பெரிய வெற்றி மற்றும் குறிப்பிடத்தக்க சாதனை. இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. ஒரு முறை அல்ல, இரண்டு முறை அல்ல, மூன்று முறை! நாங்கள் பெற்ற அன்பு எப்போதும் எங்களுடனே இருக்கும்.
என் மீதும் எங்கள் தொலைநோக்குப் பார்வையின் மீதும் நம்பிக்கை வைத்த படங்களின் தயாரிப்பாளர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நம்பிய இயக்குனர்களுக்கு, இப்படத்தினை வெற்றிபெற உதவிய அனைத்து அற்புதமான நடிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பதிவிட்டதுடன், குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் படக்குழுவினரை குறிப்பிட்டும் நன்றி தெரிவித்துள்ளார்.