பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் | பிரபாஸ் பிறந்தநாளில் 3 அப்டேட்கள் தந்த தயாரிப்பாளர்கள் | பிரதீப் ரங்கநாதனும்... பின்னே மலையாள ஹீரோயின்களின் ராசியும்… | ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! |

கல்கி கிருஷ்மூர்த்தி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்கிற வரலாற்று புதினம் திரைப்படமானது அனைவரும் அறிந்த ஒன்று. பலரின் முயற்சிக்கு பிறகு கடைசியாக மணிரத்னம் அந்த படத்தை இயக்கினார். அது இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றியும் பெற்றது.
ஆனால் கல்கி எழுதிய சமூக கதை ஒன்றும் திரைப்படமானது. அந்த படம் 'பொன்வயல்'. ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கிய இந்த படத்தில் டி.ஆர்.ராமச்சந்திரன், அஞ்சலிதேவி, ஆர்.எஸ்.மனோகர், டி.வி.குமுதினி, மைனாவதி, கே.சாரங்கபாணி, டி.பி.முத்துலட்சுமி, வி.கே.ராமசாமி, கே.ஏ.தங்கவேலு, 'புலிமூட்டை' ராமசாமி, பி.டி.சம்பந்தம், டி.ஆர்.பி.ராவ், டி.இ.கிருஷ்ணமாச்சாரி, கே.வி.சீனிவாசன், ராமையா சாஸ்திரி, கே.சீனிவாசன், சந்திரன் மற்றும் பலர் நடித்தனர். துறையூர் ராஜகோபால் சர்மா இசை அமைத்திருந்தார். ஜெயந்தி பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்.ராமச்சந்திரன் தயாரித்தார்.
கல்கி தனது வார இதழான கல்கியில் 'பொய்மான் கரடு' என்ற தலைப்பில் ஒரு தொடரை எழுதினார், சேலம் மாவட்டத்தில் ஒரு பரந்த வறண்ட நிலத்தைப் பற்றிய கதை அது, அங்குள்ள ஒரு மலை ஓய்வெடுக்கும் மான் போன்றது, அதனால் அந்த இடத்திற்கு 'பொய்மான் கரடு' என்று பெயர் வந்தது.
அந்த பகுதியில் செங்கோடன் என்ற விவசாயி தனது 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார். தனது இடத்திற்கு அவர் 'பொன்வயல்' என்று பெயர் சூட்டி மகிழ்கிறார். திடீரென அந்த நிலத்திற்கு கீழே பெரும் தங்கபுதையல் இருப்பதாக வதந்தி பரவுகிறது. அதனை எடுக்க பலரும் முயற்சி செய்கிறார்கள். உண்மையில் அங்கு தங்க புதையல் இருந்ததா? அது யார் கைக்கு கிடைத்தது என்பதுதான் படத்தின் கதை. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.




