முத்தக்காட்சிக்கு செட் ஆகாத விஷ்ணு விஷால் | விவசாயத்தை விட சினிமா எடுப்பது கஷ்டம் : புதுமுக இயக்குனர் | கவிஞர் வாலி விருது பெறும் கங்கை அமரன் | எழுத்தாளர் பூமணியின் கசிவு கதையில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் | மீண்டும் ஹீரோவான ஆனந்த்ராஜ் | போலீஸ் கமிஷனரிடம் அம்பிகா வைத்த கோரிக்கை | போதை பொருள் விவகாரம் : ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன் | பிளாஷ்பேக் : சபரிமலையில் படப்பிடிப்பு ; நடிகைகளுக்கு அபராதம் | பிளாஷ்பேக் : சினிமாவான கல்கியின் சமூக கதை | தனி கதாநாயகனாக முதல் வெற்றியைப் பதிவு செய்த துருவ் விக்ரம் |

தமிழ் சினிமாவில் ஆச்சரியப்படும் விதத்தில் ஒரு சாதனையைப் படைத்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். 'கோமாளி' படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, இரண்டாவது படத்திலேயே இயக்கம், நடிப்பு மாறி, அடுத்து நடிப்பில் மட்டும் இரண்டு வெற்றிப் படங்களில் நடித்து அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்றுள்ளார்.
அவர் கதாநாயகனாக அறிமுகமான 'லவ் டுடே' படத்தில் மலையாள நாயகியாக இவானா கதாநாயகியாக நடித்திருந்தார். இரண்டாவது படமான 'டிராகன்' படத்தில் அனுபமா பரமேஸ்வரன், மூன்றாவது படமான 'டியூட்' படத்தில் மமிதா பைஜு என அவர்களும் மலையாள கதாநாயகிகள்தான்.
தொடர்ந்து மலையாள கதாநாயகிகளுடன் ஜோடியாக நடித்து ஹாட்ரிக் 100 கோடி சாதனையைப் பெற்றுள்ளார். சினிமாவில் கதை, இயக்கம், இசை, நடிப்பு எனப் பேசினாலும் ராசி, சென்டிமென்ட் என்றும் பேசுவார்கள். அந்த விதத்தில் மலையாள ஹீரோயின்களின் ராசி, பிரதீப் ரங்கநாதனுக்கு சிறப்பாகவே அமைந்துள்ளது.
அவரது அடுத்த படமான 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் மங்களூருவைச் சொந்த ஊராகக் கொண்ட கிரித்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். மலையாள கதாநாயகிகளின் ராசி போல மங்களூரு நாயகியின் ராசியும் பிரதீப்புக்குக் கை கொடுக்குமா என்பதை டிசம்பர் 18 வரை காத்திருந்து பார்க்க வேண்டும்.




