‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில், கார்த்தி, கிர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடிப்பில் இந்த வாரம் டிசம்பர் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள படம் 'வா வாத்தியார்'. இந்தப் படத்தை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த வாரம் இடைக்காலத் தடை விதித்திருந்தது.
இன்று டிசம்பர் 8 இந்த இடைக்காலத் தடை குறித்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. செலுத்த வேண்டிய சுமார் 21 கோடி ரூபாயை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் செலுத்தி தடையை நீக்கும் உத்தரவைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் எழுந்துள்ளது. நீதிமன்ற விசாரணைக்குப் பிறகே இது முடிவாகும்.
இதனிடையே, இன்று மாலை சென்னையில் இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வை நடத்த உள்ளார்கள். அதற்கான அழைப்புகள் மீடியா உட்பட அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.