ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
2022ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அன்றைய தினத்தில் புதிய படங்கள் வெளிவராமல் நான்கு நாட்கள் முன்னதாக நேற்றே வெளியானது. இந்த ஆண்டு தீபாவளியில் கார்த்தி நடித்துள்ள 'சர்தார்', சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'ப்ரின்ஸ்' படங்கள் வெளிவந்துள்ளன.
இவற்றில் 'சர்தார்' படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனங்களும், 'ப்ரின்ஸ்' படத்திற்கு நெகட்டிவ்வான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கின்றன. 'சர்தார்' படத்தைப் பொறுத்தவரையில் படத்தின் நீளம், பாடல்கள், சில லாஜிக் மீறல்கள் ஆகியவை மைனஸ் ஆக அமைந்துள்ளன. 'ப்ரின்ஸ்' படத்தைப் பொறுத்தவரையில் சிவகார்த்திகேயனை மட்டுமே வைத்து ரசிகர்களை வரவழைத்துவிடலாம் என நினைத்திருக்கிறார்கள். படத்தில் கதையும் இல்லை, காமெடியும் இல்லை என்பதே பொதுவான விமர்சனங்களாக வைக்கப்படுகின்றன.
இரண்டு படங்களுக்கும் ஹவுஸ்புல் ஆகும் அளவிற்கு முன்பதிவு நடக்கவில்லை என்பது உண்மை. படத்திற்குக் கிடைக்கும் வரவேற்புகளை வைத்து போட்டியில் 'சர்தார்' படம்தான் முன்னணியில் உள்ளது. பலதரப்பட்ட விமர்சன ரேட்டிங்குகளிலும் 'ப்ரின்ஸ்' படத்தை சர்தார் படம்தான் முந்துகிறது.
இன்று, நாளை, நாளை மறுநாள் தீபவாளி தினம் ஆகிய நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் பல மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகவில்லை என்றாலும் குறிப்பிடத்தக்க அளவிற்கு இரண்டு படங்களுக்குமே முன்பதிவு நடைபெற்றுள்ளது. அதனால், இரண்டு படங்களும் மோசமான வசூலைப் பெற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
'ப்ரின்ஸ்' படத்திற்கு சிவகார்த்திகேயனின் சம்பளத்தைத் தவிர படத்தின் பட்ஜெட்டில் பெரிய செலவு எதுவும் இல்லை. அதிக செலவில்லாத ஒரு படத்தைத்தான் எடுத்திருக்கிறார்கள். 'சர்தார்' படத்திற்கான பட்ஜெட் 'ப்ரின்ஸ்' படத்தின் பட்ஜெட்டை விடவும் நிச்சயம் அதிகமாகவே இருக்கும். அடுத்த மூன்று நாட்களுக்கு இந்தப் படங்கள் தாக்குப் பிடித்துவிடும். தீபாவளிக்குப் பிறகு தியேட்டர்களில் 'சர்தார்' படத்திற்கான ரசிகர்கள் வருகை தொடரலாம். ஆனால், 'ப்ரின்ஸ்' படத்திற்கான வரவேற்பு குறைய வாய்ப்புண்டு.