பெங்களூருவில் ‛எம்புரான்' படத்திற்காக விடுமுறை அளித்து சிறப்பு காட்சிக்கும் ஏற்பாடு செய்த கல்லூரி | சபாபதி, சந்திரமுகி, கல்கி 2898 ஏடி- ஞாயிறு திரைப்படங்கள் | டாக்சிக் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | வதந்தி பரப்பாதீங்க - அஸ்வத் மாரிமுத்து | எம்புரான் படத்தில் பஹத் பாசில் இல்லை ; பிரித்விராஜ் திட்டவட்டம் | தினசரி வாடகைக்கு விடப்படும் மம்முட்டி வீடு : வாய்பிளக்க வைக்கும் வாடகை | ஜனநாயகன் படத்தின் வியாபாரம் தொடங்கியது | தவறை உணர்ந்தேன் : மன்னிப்பு கேட்ட பிரகாஷ்ராஜ் | தனுஷின் இட்லி கடை ஏப்ரல் 10ல் வெளியாகாது : தயாரிப்பாளர் தகவல் | கோடை கொண்டாட்டத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ்? |
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் யாருடைய பாடல் அதிகமாகக் கேட்கப்படுகிறது என்று கேட்டால் மறுபேச்சு பேசாமல் இளையராஜா என்றுதான் சொல்ல முடியும். அவரது இசையில் வெளிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களின் பாடல்கள் யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டா ஆகிய தளங்களில் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது, தினமும் பெற்று வருகிறது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என அவருடைய பல பாடல்கள் அவருடைய அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்களில் மட்டுமல்லாமல் பல்வேறு யூடியூப் சேனல்களிலும் இடம் பெற்றுள்ளது. அவற்றையெல்லாம் மொத்தமாக கணக்கிட்டால் அதன் விவரங்களைக் கணக்கிடவே சில வருடங்கள் ஆகலாம்.
பாடல்களில் தனி ரசனையைக் கொண்டு வந்த இளையராஜா பின்னணி இசையிலும் தனித்துவத்தைக் கொண்டு வந்தார். பல படங்களில் அவருடைய பின்னணி இசையும் படத்தின் ரசிப்புத்தன்மைக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. அப்படியான பின்னணி இசையை எங்கெங்கிருந்தோ 'சுட்டு' சமூக வலைத்தளங்களில் பலரும் பரப்பி வந்தார்கள்.
ஆங்கிலத்தில் 'பிஜிஎம்' என சுருக்கமாக அழைக்கப்படும அந்த 'பேக்கிரவுண்ட் மியூசிக்' இசைக்காக தனி யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்துள்ளார் இளையராஜா. அதன் அறிமுக வீடியோ ஒன்று நேற்று அந்த சேனலில் வெளியிடப்பட்டது. இனி அந்த சேனலில் அவருடைய திரைப்பட பின்னணி இசை தொகுப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளையராஜாவின் ரசிகர்களுக்கு அது மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
தனது பாடல்களுக்கென ஏற்கெனவே 'இளையராஜா அபிஷியல்' என்ற சேனல் ஒன்றை நடத்தி வருகிறார் இளையராஜா.