தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
மலையாள திரையுலகில் பிரபல முன்னணி நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த வருடம் சூரி, சசிகுமார் இணைந்து நடித்த கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவர், ஏற்கனவே தமிழ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். அதுமட்டுமல்ல மலையாளத்தில் ஒரு தயாரிப்பாளராகவும் மாறி மாளிகைப்புரம், மேப்படியான் என இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இவர், கடந்த வருட இறுதியில் வெளியான அதிரடி ஆக்ஷன் படமான மார்கோ படத்திலும் நடித்தார். அந்த படமும் 100 கோடிக்கு மேல் வசூலித்தது. கடந்த வருடங்களில் இவரது நான்கு படங்கள் மூலமாக இவருக்கு ரசிகர் வட்டம் அதிகரித்து உள்ளது. சோசியல் மீடியாவில் பல லட்சம் பேர் உன்னி முகுந்தனை பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவலை தனது முகநூல் பக்கம் மூலமாக ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் உன்னி முகுந்தன். மேலும் இந்த பக்கத்தில் வெளியாகும் பதிவுகள், செய்திகள் என எதற்கும் யாரும் பதில் அளிக்க வேண்டாம். அது எல்லாமே ஹேக்கர்களால் பதிவிடப்படுபவை என்றும் கூறியுள்ளார் உன்னி முகுந்தன்.
இது குறித்த சிக்கலை தீர்ப்பதற்கு தனது சோசியல் மீடியா குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் என்றும், தனது இன்ஸ்டாகிராம் கணக்கு மீட்கப்பட்டதும் தானே இது குறித்து அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஏதாவது சம்பந்தமில்லாத நபர்களிடம் இருந்து மெசேஜ் லிங்க் வந்தால் அவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் அவர் ரசிகர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.