என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

பிரதமர் மோடியின் வாழ்க்கை “மா வந்தே” என்ற பெயரில் சினிமாவாகிறது. சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதமர் கேரக்டரில் உன்னி முகுந்தன் நடிக்கிறார். இது குறித்து படக்குழு கூறுகையில் ''இந்த திரைப்படம், நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடி அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கிறது. சிறுவயது முதல் தேசத்தின் தலைவராக உயர்ந்த வரலாற்றையும் உண்மை சம்பவங்களையும் அடிப்படையாகக் கொண்டும் உருவாக்கப்படுகிறது.
குறிப்பாக, அவருக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் சம்பந்தப்பட்ட ஆழமான பந்தத்தை வெளிப்படுத்துகிறது. சர்வதேச தரத்திலும், தரமான கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம் உருவாக்கப்படுகிறது. பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது'' என்கிறார்கள்.
ஒரு தாயின் துணிவு பல போர்களை வெல்லும் என்ற சப் டைட்டலுடன் உருவாகும் இந்த படத்தை கிராசாந்தி குமார் இயக்க, கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். பிரதமர் வேடத்தில் நடிக்கும் உன்னி முகுந்தன் தமிழில் சீடன், கருடன் படங்களில் நடித்து இருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த மாளிகாபுரம் என்ற சபரிமலை பின்னணியிலான படம் பெரிய ஹிட் ஆனது.