துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

2023ல் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜெயிலர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் நடித்த சில நடிகர்கள் அப்படியே இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்து நடிக்க, மேலும் பல புது நடிகர்களும் இதில் இணைந்துள்ளனர்.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தமிழில் வெளியான விக்ரமின் வீர தீர சூரன் படத்தில் வில்லனாக அறிமுகமான மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மலையாள நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் இதில் இணைந்துள்ளார். இவர் மலையாளத்தில் ஹிட்டான அங்கமாலி டைரிஸ் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். மேலும் மோகன்லாலின் வெளிப்பாடிண்டே புஸ்தகம் படத்தில் நடித்து பெயர் பெற்றவர்.
இவரை போலவே கடந்த வருடம் சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான போர் தொழில் படத்தில் வில்லனாக நடித்த மலையாள நடிகர் சுனில் சுகாடாவும் இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மற்றொரு மலையாள நடிகரான கோட்டயம் நசீரும் நடித்து வருகிறார். தற்போது சென்னையில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் இவர்கள் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். அப்போது தாங்கள் எடுத்துக் கொண்ட செல்பியை நடிகை அன்னா ரேஷ்மா ராஜன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.