சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல் | நோட்டீஸ் அனுப்பிய ரன்வீர் சிங் : பணிந்தது தொழிலாளர்கள் கூட்டமைப்பு | கேரளாவில் ரீ ரிலீஸாகும் அல்லு அர்ஜுனின் 'ஹேப்பி' | ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின் | 61 வயதில் 3வது திருமணத்திற்கு தயாரான அமீர்கான் : ஜூலை 5ல் கவுரி ஸ்ப்ராட்டை மணக்கிறார் | பரிமளா அண்ட் கோ படத்திற்கு யுஏ சான்றிதழ் | பிரேம்ஜியை காதலித்தேனா.... : உண்மையை உடைத்து பேசிய சோனா | விஜய் சேதுபதி பட தலைப்பு ‛பக்தா' வா | அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் |

மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ரத்னகுமார். அந்தப்படம் ஓரளவுக்கு பேசப்பட அதன் பின்னர் அவரது இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் ஆடை, சந்தானம் நடிப்பில் குலு குலு ஆகிய படங்கள் வெளிவந்தன. ஆனால் இந்த இரு படங்களும் வெற்றியை பெறவில்லை.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜின் ‛மாஸ்டர், விக்ரம், லியோ' உள்ளிட்ட படங்களுக்கு கூடுதலாக திரைக்கதை, வசனமும் எழுதினார். தற்போது சர்தார் 2, கராத்தே பாபு ஆகிய படங்களுக்கு கூடுதல் திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.
இதைத்தொடர்ந்து ரத்னகுமார் அடுத்து ஒரு படத்தை இயக்க போகிறார். இதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க போகிறது. இதில் நாயகனாக ‛ரெட்ரோ' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விது நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.




