Advertisement

சிறப்புச்செய்திகள்

நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிவகார்த்திகேயன் படங்களால் 120 கோடி நஷ்டம் : தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்

03 ஜூன், 2026 - 06:27 IST
எழுத்தின் அளவு:
Sivakarthikeyans-films-have-caused-a-loss-of-120-crores-Producer-shares-information
Advertisement

சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ', 'டாக்டர்', 'அயலான்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தவர் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்.. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இவர் கூறும்போது, சிவகார்த்திகேயன் படங்களைத் தயாரித்த வகையில் கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக ஒரு அதிர்ச்சித் தகவலைக் கூறியுள்ளார். இதில் 'டாக்டர்' படம் முழுக்க முழுக்க இவர் தயாரித்தது. 'ஹீரோ' மற்றும் 'அயலான்' ஆகிய படங்கள் தயாரிப்பில் இருக்கும்போது நெருக்கடியைச் சந்தித்ததால், அந்த தயாரிப்புப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு அந்தப் படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

அந்த வகையில் கிட்டத்தட்ட தனக்கு 120 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும், சிவகார்த்திகேயனுக்கும் இதில் 55 கோடி நஷ்டம் ஏற்பட்டது என்றும் கூடுதல் விவரங்களையும் அவர் கூறியுள்ளார். 'ஹீரோ' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறத் தவறியதும்; 'டாக்டர்', 'அயலான்' போன்ற படங்கள் தயாரிப்பில் இருந்த காலகட்டத்தில் கொரோனா தாக்கம் காரணமாக கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தயாரிப்புப் பணிகள் நிறுத்தப்பட்டிருந்ததால், அது முதலீடு செய்திருந்த பணத்திற்கான வட்டித் தொகையில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது என்றும் கூறியுள்ளார் கோட்டப்பாடி ஜே. ராஜேஷ்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஜனநாயகன் ரிலீஸுக்காக காத்திருக்கும் விஜய் சேதுபதியின் ட்ரெயின்ஜனநாயகன் ரிலீஸுக்காக ... 20 ஆண்டுகளாக வெற்றிக்கு காத்திருக்கும் பிரஜின் 20 ஆண்டுகளாக வெற்றிக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Tukluck - sivagangai,இந்தியா
08 ஜூன், 2026 - 10:06 Report Abuse
Tukluck இங்கிலீஷ் படத்த காப்பி அடிக்காம நல்ல கதையா எடுங்கடா
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
05 ஜூன், 2026 - 06:06 Report Abuse
Mani . V ஏன், அவனை வைத்து படம் எடுத்தால் தலையில் போட துண்டு கூட மிஞ்சாது என்று தெரிந்தும் அப்புறம் ஏன் அவன் பின்னாடி ஓடுகிறீர்கள்? சரி, சரி, அவன் பல குடும்பத்தில் கும்மி அடித்தது மாதிரி உன் குடும்பத்தில் அடிக்காமல் விட்டதற்கு சந்தோஷப்படவும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap