பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் |
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் ‛இட்லி கடை', ஹிந்தியில் 'தேரே இஸ்க் மெயின்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. இந்த படங்களுக்கு பின் ‛போர் தொழில்' பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ். இதற்கு 'அறுவடை' என தலைப்பு வைத்துள்ளனர். இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர்.
படத்தின் பூஜை நாளை ஜூலை 10ல் நடக்கும் நிலையில் 15ம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்குகின்றனர். இதில் கதாநாயகியாக மலையாள நடிகை மமிதா பைஜூ நடிக்க போகிறார். இவர் தவிர்த்து மலையாள நடிகர்கள் ஜெயராம், சுராஜ் வெஞ்சராமுடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.