காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

சர்தார் 2, வா வாத்தியார் போன்ற படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. இந்த படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளன. இதையடுத்து ‛டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இது கார்த்தியின் 29வது படமாக உருவாகிறது. ட்ரீம் வாரீயர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் 1960களில் ராமேஸ்வரம் பின்னணியில் கடல் கொள்ளையர் கதைகளத்தில் உருவாகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பை காரைக்கால் மற்றும் ராமேஸ்வரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கான செட் அமைக்கும் பணி அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி நாளை, ஜூலை 10ம் தேதியன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது என தகவல் கிடைத்துள்ளது.