ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

சமீபத்தில் கன்னடத்தில் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமாக அதன் பிரீக்வல் ஆக வெளியான இந்த படமும், முதல் பாகத்தை போல ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மிக முக்கியமான வேடத்தில் நடிகர் ஜெயராம் நடித்திருந்தார்.
சமீபத்தில் இந்த படம் குறித்து ஒரு பேட்டியில் அவர் கூறும்போது, “நடிகர் மம்முட்டி இந்த படம் பார்த்துவிட்டு எனக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார். இந்த படம் மிக அற்புதமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். கேஜிஎப் படத்தை போலவே இந்த படமும் ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். ஆயிரம் கோடி படம் ஒன்றில் மலையாள நடிகராக நானும் இடம் பிடித்திருப்பது பெருமிதமும் மகிழ்ச்சியும் கலந்த ஒன்று” என்று கூறியுள்ளார். இதன் மூலம் கேஜிஎப் 2 படம் போல காந்தாரா 2வும் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்கிறாரோ ஜெயராம்?




