நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 |

2025ம் ஆண்டில் இந்தியாவில் அதிக வசூலைக் குவித்த படமாக கன்னடப் படமான 'காந்தாரா சாப்டர் 1' படம் இருக்கிறது. 850 கோடி வசூலித்துள்ள இந்தப் படம் நாளை மறுநாள் அக்டோபர் 31ம் தேதி ஓடிடி தளத்தில் ஹிந்தி தவிர கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
இந்நிலையில் ஆன்லைன் டிக்கெட் இணையதளம் ஒன்று அவர்களது தளத்தில் இப்படத்திற்காக இதுவரையில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நான்காவது வாரத்தில் இப்படம் வந்துள்ள நிலையிலும் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படுகிறதாம்.
14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை என்றால் ஒரு டிக்கெட்டுக்கு 'வசதிக் கட்டணம்' என 41 ரூபாய் சேர்த்தே வாங்குகிறார்கள். அப்படியென்றால் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை மூலம் மட்டுமே அந்த ஆன்லைன் நிறுவனம் 57 கோடியே 40 லட்ச ரூபாயை வருவாயாக ஈட்டியுள்ளது.
இதர ஆன்லைன் நிறுவனங்களின் விற்பனைகள் என்னவென்பது தெரியவில்லை. ஆக, 'காந்தாரா சாப்டர் 1' படம் மூலம் தியேட்டர் வசூல் 850 கோடி என்றால் மறைமுகமான இந்த வசதிக் கட்டண வசூல், தியேட்டர் கேண்டீன் வியாபாரம், பார்க்கிங் வருவாய் என இதர வருவாய்களை சேர்த்துப் பார்த்தால் அவையும் சில 100 கோடிகள் வருவாய் ஈட்டியிருக்க வாய்ப்புகள் அதிகம்.