'திரிஷ்யம் 3' படத்தில் முக்கிய வேடத்தில் சுனில் | என்னை அழைத்தது வில்லனாக நடிக்க அல்ல; 'பென்ஸ்' பட ட்விஸ்ட் உடைத்த நிவின்பாலி | 23வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது: ரஜினிக்கு விருது | ஆரோக்கியமான வாழ்க்கை, வயதை வென்ற வசீகரம் : ரஜினிக்கு பிரதமர், முதல்வர் வாழ்த்து | பிரித்விராஜின் அண்ணன் படம் வளைகுடா நாடுகளில் வெளியாக தடை | 30வது கேரள சர்வதேச திரைப்பட விழாவின் முதல் பிரதிநிதியாக கவுரவிக்கப்பட்ட நடிகை லிஜோமோல் ஜோஸ் | திலீப் படத்தில் 'கில்லி' கனெக்சன் ; உறுதி செய்த மோகன்லால் | குழப்பத்தில் தமிழ்ப் படங்களின் வெளியீடுகள் : கோபத்தில் தியேட்டர்காரர்கள் | ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி நடிக்க மறுத்த படங்களில் பெயர் வாங்கிய ரம்யா கிருஷ்ணன் | அகண்டா 2 : சமூக வலைத்தளங்களில் பரவும் 'டிரோல்கள்' |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய படங்கள், அல்லது பிரம்மாண்டத் திரைப்படங்கள் வெளியாகும் போது, டிக்கெட் கட்டண உயர்வு அளிப்பதை தெலுங்கு மாநிலங்களான தெலுங்கானா, ஆந்திரா அரசுகள் வழக்கமாக வைத்திருக்கின்றன.
சமீபத்தில் பவன் கல்யாண் நடித்து வெளிவந்த 'ஓஜி' படம் வெளிவந்த போதும் அப்படியான டிக்கெட் கட்டண உயர்வு தெலுங்கானா மாநிலத்திலும், ஒரு வாரத்திற்கு அளிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரம் திரையுலகில் கொஞ்சம் சலசலப்பை ஏற்படுத்தியது.
இனி, தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் இப்படியான கட்டண உயர்வு வழங்கப்பட மாட்டாது என்று செய்திகள் வெளிவந்தன. ஆனால் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“பெரிய தயாரிப்பாளர்கள் மற்றும் பெரிய ஹீரோக்கள் என்னிடம் டிக்கெட் விலை உயர்வு கோரி வருகின்றனர். அதிகரித்த வருவாயில் சில சதவீதத்தை திரைப்படத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் அவர்களிடம் தொடர்ந்து கூறி வருகிறேன். ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அதிக வருவாய் பெறுகின்றனர், ஆனால் தொழிலாளர்களுக்கு அது பயன்படவில்லை. இனிமேல், எந்தப் படத்திற்கும் டிக்கெட் உயர்வு, அரசாணை தேவைப்பட்டால், சம்பாதித்த கூடுதல் வருமானத்தில் 20 சதவீதம் திரைப்படத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இது அனைத்து படங்களுக்கும் பொருந்தும்,” என்று தெலுங்கானா முதல்வர் கூறியுள்ளார்.