நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

பாலிவுட்டில் பிரபலமான முன்னணி நடிகர் அமீர்கான், 61. இவருக்கு ஏற்கனவே இரு திருமணங்கள் நடந்து விவாகரத்து ஆன நிலையில் கவுரி ஸ்ப்ராட், 47 என்ற பெண்ணை காதலித்து வருகிறார். சில நிகழ்ச்சிகளில் இவரை அமீர்கான் அழைத்து வந்திருக்கிறார். கவுரிக்கு ஏற்கனவே திருமணமாகி, 7 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் அமீர்கான் - கவுரியின் திருமணம் ஜூலை 5ம் தேதி பதிவு திருமணம் மூலம் எளிய முறையில் மிகவும் நெருக்கமான குடும்ப உறவுகள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க அமீர்கானின் இல்லத்திலேயே நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திருமணத்திற்கான ஏற்பாடுகள் இப்போதிருந்தே ஆரம்பமாகி விட்டதாம். இதில் அமீர்கானின் சினிமா நண்பர்களான சல்மான்கான், ஷாரூக்கான் ஆகியோரும் பங்கேற்க உள்ளனராம்.
அமீர்கான் 1986ல் ரீனா தத்தா என்பவரை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஜூனைத் கான் என்ற மகனும், ஐரா கான் என்ற மகளும் உள்ளனர். 2002ல் ரீனாவை பிரிந்த அமீர், 2005ல் கிரண் ராவ்வை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆசாத் என்ற மகன் உள்ளார். 16 ஆண்டுகள் கழித்து 2021ல் கிரணையும் விவாகரத்து செய்தார் அமீர். இப்போது கவுரியை 3வது திருமணம் செய்ய போகிறார் அமீர்.