இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
தமிழ் திரையுலகில் தற்போது லேட்டஸ்ட் கிசுகிசுவில் சிக்கியிருப்பவர் நடிகர் தனுஷ் தான். அவருக்கும் அவரது மனைவி ஐஸ்வர்யாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதற்கு முன்பும் பிரிந்த பின்பும் கூட அவ்வப்போது தனுஷ் குறித்து சில கிசுகிசுக்கள் எழுந்து அப்படியே அடங்கும். இந்த முறை நடிகை மிருணாள் தாக்கூருடன் இணைந்து இந்த கிசுகிசுக்களில் சிக்கி உள்ளார் தனுஷ். அதற்கு முக்கிய காரணம் மிருணாள் தாக்கூரும் இவரும் அடுத்தடுத்த இரண்டு நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டதும் மிக நெருக்கமாக பேசிக் கொண்டதும் தான். இது குறித்த புகைப்படங்கள் தான் இந்த யூகத்தை கிளப்பின.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் இவர்களுக்குள் இருக்கும் நட்பு குறித்து இன்னும் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் தனுஷின் சகோதரிகளான கார்த்திகா கார்த்திக் மற்றும் விமலகீதா ஆகியோரை மிருணாள் தாக்கூர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அதுமட்டுமல்ல அவர்கள் இருவரும் கூட மிருணாள் தாக்கூரையும் பாலோ செய்கிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இது போதாதா ? இந்த கிசுகிசுகளுக்கு இன்னும் வலு சேர்ப்பதற்கு. சித்தார்த், ஜெயம் ரவி, மாதம்பட்டி ரங்கராஜ் வரிசையில் அடுத்த தனுஷும் இடம் பிடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.