ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

'கூலி' படத்தை அடுத்து தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்நிலையில் அவர் சினிமாவில் நடிக்க வந்து கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியோடு 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் முன்வந்த போது அதை தவிர்த்து விட்டார் ரஜினி.
இந்த நிலையில் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையுலகில் ரஜினி 50 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக அவரை கவுரவிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்த பாராட்டு விழா வருகிற 28ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இந்த விழாவில் கவரவிக்கப்பட உள்ளார்.
அதாவது, ரஜினிகாந்த் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் என்றால் பாலகிருஷ்ணாவோ 1974ம் ஆண்டிலேயே 'தத்தம்மா காலா' என்ற தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி விட்டார். அந்த வகையில் ரஜினியை போலவே பாலகிருஷ்ணாவும் தெலுங்கு சினிமாவில் 50 ஆண்டுகளாக நடித்து வருகிறார். அதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் நவம்பர் 28ம் தேதி கோவாவில் நடைபெறும் இந்த திரைப்பட விழாவில் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.




