'உஸ்தாத் பகத் சிங்' விழாப் பேச்சு : மன்னிப்பு தெரிவித்த பார்த்திபன் | கோடையில் வெளி வர காத்திருக்கும் படங்கள் | பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு |

ராஜூமுருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா நடித்த 'மை லார்ட்' படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் இயக்குனர்கள் பாலா, லிங்குசாமி, த.செ.ஞானவேல், மாரிசெல்வராஜ், ஏ.வெங்கடேஷ் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய பாலா, சசிகுமாரின் டான்சை, ஹீரோயின் சைத்ராவின் நடிப்பை பாராட்டினார். சசிகுமார் தனது சிஷ்யன் என்பதில் பெருமை என்றார். அப்போது மேடையில் பேசிய ஏ.வெங்கடேசை தனக்கு தெரியாது என்றும் அவரது படங்கள் பார்த்தது இல்லை என்றும், ஆனால், இப்போது மாரிசெல்வராஜ்தான் தனக்கு வழிகாட்டி என்றும் அவர் படத்தை பாராட்டினார் பாலா. இது பலரையும் வியக்க வைத்தது.
'ஏய், பகவதி, மகாபிரபு, சாக்லெட், குத்து' உட்பட பல கமர்ஷியல் படங்களை இயக்கிய ஏ.வெங்கடேசை உண்மையில் பாலாவுக்கு தெரியாதா? அல்லது கலாய்த்தாரா என்று பார்வையாளர்கள் முணுமுணுத்தனர். மேடையில் இப்படி பாலா ஓபனாக பேசியதால் ஏ.வெங்கடேஷ் அவமானப்பட்டார்.
அதேபோல் சசிகுமார் பேசுகையில் ''இயக்குனர் ராஜூமுருகன் ஒரு சைக்கோ என பலரும் என்னிடம் சொன்னார்கள். நான் பல நாட்கள் அவரிடம் பணியாற்றினேன். அவர் அப்படிப்பட்டவர் அல்ல, அவர் சினிமா மீது காதலாக இருக்கிறார். அவரை பற்றி அப்படி சொன்னவர்கள் தான் சைக்கோ'' என்றார்.
அதேபோல், விழாவில் பேசிய பாலா இந்த படத்தை தயாரித்தவர் அம்பேத்குமார் எம்எல்ஏ (வந்தவாசி திமுக எம்எல்ஏ). இந்த மாதிரி வரிசையாக சில படங்கள் தயாரித்தால், அவர் அமைச்சர் ஆகிவிடுவார். அதை தலைமை கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார். ராஜூமுருகனை வைத்து 'ஜிப்ஸி' படமெடுத்தவர் அம்பேத்குமார். ஜீவா நடித்த அந்த படம் பிளாப் ஆனது. ஆனாலும், ராஜூமுருகன் நட்புக்காக மைலார்ட் படத்தை அவர் தயாரித்து இருக்கிறார். பிப்ரவரி 13ல் படம் ரிலீஸ் ஆகிறது.