புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தென்னிந்திய சினிமாவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ஜெயசுதா. தமிழில் சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், தீர்க்க சுமங்கலி, நான் அவனில்லை, அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் நடித்த வாரிசு மற்றும் கஸ்டடி படங்களில் நடித்தார்.
இவரது மகன் நிஹார் தற்போது நடிகராகி உள்ளார். இவர் நடித்த தெலுங்கு படமான ரெக்கார்ட் பிரேக் தமிழ் உள்ளிட்ட 8 மொழிகளில் வருகிற மார்ச் 8ம் தேதி வெளியாகிறது. ஸ்ரீ திருமலா திருப்பதி வெங்கடேஸ்வரா பிலிம்ஸ் சார்பில் சத்லவாதா ஸ்ரீனிவாஸ் ராவ் தயாரித்திருக்கிறார். நிஹாருடன் நாகர்ஜூனா, ராக்தா இப்திகர் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு நிஹார் பேசும்போது "கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து உள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. தெலுங்கு, தமிழ் உள்பட 8 மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம்" என்றார்.