இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி மலையாளத்தில் ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. வளர்ந்து வரும் இளம் ஹீரோக்களான ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம் மற்றும் நீரஜ் மாதவ் என மூன்று பேர் இந்த படத்தில் கதாநாயகர்களாக நடித்திருந்தனர். முழுக்க முழுக்க ஆக்ஷனை மட்டுமே மையப்படுத்தி இந்த படத்தை இயக்கியிருந்தார் அறிமுக இயக்குனர் நகாஷ் ஹிதாயத். தனது குடும்பத்தை துன்புறுத்தி அவமதித்தவர்களுக்கு தனது நண்பர்களுடன் சேர்ந்து பாடம் புகட்டும் ஒரு இளைஞனின் பழிவாங்கும் கதையாக உருவாகி இருந்தது.
அதில் மார்சியல் ஆர்ட்ஸ் கலையை பயன்படுத்தி ஆறு சண்டை காட்சிகளை இணைத்து ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து படைத்திருந்தனர். வெளியான நாள் முதல் மிகப்பெரிய வரவேற்பை பெற்று ஓடிய இந்த படம் தற்போது 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது. விநியோகஸ்தர்கள் வட்டாரத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் தயாரிப்பு நிறுவனம் இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை..
இதற்கு முன்னதாக மோகன்லால், திலீப் என முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் என்கிற இலக்கை தொட்டு வந்த நிலையில் கடந்த வருடத்திலிருந்து அறிமுக இயக்குனர்கள், வளர்ந்து வரும் நடிகர்கள் நடிக்கும் படங்கள் கூட 50 கோடி, 100 கோடி வசூல் கிளப்பில் தங்களை இணைத்துக் கொண்டு மலையாள சினிமாவில் வியாபார எல்லையை விரிவுபடுத்தி வருவது ஆச்சரியமாக பார்க்கப்பட்டு வருகிறது.