பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் | தயாரிப்பாளர் சங்க தலைமையை மாற்ற வேண்டும் : பெண் தயாரிப்பாளர் போர்க்கொடி | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' 2025க்கு தள்ளி போகிறதா? | தெலுங்கு நடிகை ஹேமா உள்ளிட்ட 88 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் |
முன்னணி இசையமைப்பாளர்களுக்கு அடுத்ததாக இரண்டாம் கட்டத்தில் இருக்கும் சில இசையமைப்பாளர்களில் கொஞ்சம் பிஸியாக இயங்கி வருபவர் இசையமைப்பாளர் ஷான் ரகுமான். கடந்த 2019ல் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'ஒரு அடார் லவ்' என்கிற படத்திற்கு இவர் தான் இசையமைத்திருந்தார். அந்த படத்தில் 'மாணிக்க மலராய பூவி' என்கிற பாடல் மட்டுமல்லாது அந்தப்பாடலில் நடித்த நடிகை பிரியா வாரியர் புருவ அழகி என பெயர் பெற்று பிரபலமானதும் அனைவரும் அறிந்தது தான்.
அதே படத்தில் 'ப்ரீக் பெண்ணே' என்கிற இன்னொரு பாடலும் ஹிட் அடித்தது. இந்த பாடலை சத்யஜித் என்பவர் பாடியிருந்தார். அவரே இந்த பாடலை எழுதியும் இருந்தார். இந்த நிலையில் இந்த பாடலுக்கான பெருமையை இசையமைப்பாளர் ஷான் ரகுமான் தனக்கு கிடைக்காமல் பறித்துக் கொண்டார் என தனது சமீபத்திய பேட்டிகளில் குற்றம் சாட்டி வந்தார் சத்யஜித். இந்த நிலையில் இது பற்றி ஷான் ரகுமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஒரு அடார் லவ் படத்தை துவங்கும்போது இயக்குனர் ஒமர் லுலு சோசியல் மீடியாவில் தான் ஒரு பாடலை பார்த்ததாகவும் அந்த பாடலை இந்த படத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் என்னிடம் கூறி இந்த பாடலின் தயாரிப்பாளராக நீங்கள் இருங்கள் என்று சொன்னார். அதன்பிறகு தான் இந்த சத்யஜித்தை வரவழைத்து அவரையே பாட வைத்து இந்த பாடலை பதிவு செய்தோம். இந்த படத்தின் பாடல்களை வெளியிட்ட இசை வெளியீட்டு நிறுவனத்திடம் கூட பாடலின் கம்போசர் என சத்யஜித் பெயரையே குறிப்பிட சொல்லி இருந்தேன்.
ஆனால் இசை வெளியீட்டு நிறுவனம் அவர்களாகவே அனைத்து பாடல்களுக்கும் என்னையே கம்போசர் என்கிற அளவில் குறிப்பிட்டு விட்டார்கள். அது மட்டுமல்ல யூடியூபில் பாடல்கள் வெளியாகும்போதும் அதையே தான் குறிப்பிட்டும் வருகின்றனர். இதில் என் கையில் எதுவும் இல்லை. இதை சத்யஜித் தவறாக எடுத்துக் கொண்டால் நான் என்ன செய்வது ?
இப்படி ஒரு பாடல் இந்த படத்தில் இடம் பெறாமல் போயிருந்தால், அது சோசியல் மீடியாக்களில் வெறும் ஆயிரக்கணக்கான நபர்களால் மட்டுமே பார்க்கப்பட்டு அத்துடன் காணாமல் போயிருக்கும். இதை சத்யஜித் உணர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்று அறிமுகப்படுத்தப்படும் பாடகர்கள், பாடலாசிரியர்கள் குற்றம் சாட்ட துவங்கினால் புதியவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமா என்கிற எண்ணம் தான் தோன்றும்: என்று கூறியுள்ளார்.