திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

மலையாளத்தில் மல்டி ஸ்டாரராக உருவாகி வரும் படம் பேட்ரியாட். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மோகன்லால், மம்முட்டி இருவரும் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன் என கலர்புல்லான நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டேக் ஆப், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், விஸ்வரூபம் பட எடிட்டருமான மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார். வரும் ஏப்ரல் 23ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
ராணுவ பின்னணியில் அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகியுள்ள இதில் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம் இந்த போஸ்டரில் மோகன்லால், மம்முட்டி இருவருமே இணைந்து எதிரிகளை வேட்டையாடும் விதமாக ஓடும் காரில் பயணித்தபடி துப்பாக்கியால் சுடுவது போலவும் அவர்களுக்கு ரத சாரதியாக குஞ்சாக்கோ போபன் கார் ஓட்டுவது போலவும் இந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளது. நிச்சயமாக மலையாள ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய சம்மர் ட்ரீட் ஆக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.




