சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் |

மலையாள திரையுலகை பொறுத்த வரை நடிகர்கள் பெரும்பாலும் அரசியலை விட்டு ஒதுங்கி இருப்பார்கள். ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் அரசியலில் போட்டியிடுவார்களே தவிர மற்ற யாரும் எந்த அரசியல் கட்சிக்கும் தங்களது ஆதரவை மறைமுகமாகவோ, வெளிப்படையாகவோ தெரிவிப்பது இல்லை. குறிப்பாக முன்னணி நடிகர்களான மோகன்லால், மம்முட்டி இருவருமே அரசியலை விட்டு தள்ளியே நிற்கிறார்கள். இந்த நிலையில் தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனை நடிகர் மோகன்லால் நேர்காணல் செய்த வீடியோ ஒன்று நேற்று மாலை நேர தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த நேர்காணலின் போது முதல்வர் பினராயி விஜயன் தனது குழந்தைப் பருவம், தான் வளர்ந்த விதம் என பல பர்சனலான விஷயங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார், விரைவில் கேரளாவிலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இப்படி முன்னணி நடிகரான மோகன்லால் முதல்வரை நேர்காணல் செய்த வீடியோ கேரள அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு மோகன்லால் தனது மறைமுக ஆதரவை அளிக்கிறாரா என்கிற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.




