கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் |
கடந்த 2019ம் ஆண்டில் புரி ஜெகநாத் இயக்கத்தில் ராம் பொத்தினெனி நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஐ ஸ்மார்ட் ஷங்கர்'. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் 'டபுள் ஐ ஸ்மார்ட்' எனும் பெயரில் உருவாகி வருகிறது. இந்த பாகத்தையும் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் ராம் பொத்தினெனி, சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் 2024 மஹா சிவராத்திரி மார்ச் 8ம் தேதி அன்று வெளியாகிறது .
ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகை சாரா அலி கான் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்போது இந்த படத்தில் மற்றொரு கதாநாயகியாக நடிகை காவ்யா தபார் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக கிளாமர் ஆன பாடல் காட்சிகளை இவரை வைத்து படமாக்கி வருகிறார்களாம். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் நாயகியாக நடித்தார்.