Advertisement

சிறப்புச்செய்திகள்

'மைதிலி என்னை காதலி' நடிகர் மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல் | 'கே. சங்கர் 100' : நூற்றாண்டு கால இந்திய சினிமாவின் சிற்பிகளில் ஒருவர் | தள்ளிப்போனது டாக்சிக்: அந்த இடைவெளியில் வேறு படங்கள் வருமா? | இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

கஞ்சா பயன்படுத்தியதாக மலையாள நடிகரின் மகன் கைது ; தந்தையின் நம்பிக்கையை தகர்த்தார்

01 மார், 2026 - 06:01 IST
எழுத்தின் அளவு:
Three-youths-held-with-ganja-in-Kochi;-actor-Tini-Toms-son-among-those-arrested;-Four-grams-seized
Advertisement


மலையாள திரையுலகில் குணசித்திர நடிகர்களில் ஒருவராக பல படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகர் டினி டாம். சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்துள்ள இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் மம்முட்டிக்கு டூப் நடிகராகவும் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் இவரது மகன் ஆடம் சீம் என்பவர் கஞ்சா பயன்படுத்தியதாக திருப்பணித்துரா அருகில் உள்ள ஹில் பேலஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இவரது நண்பர்களான இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் கடந்த 2023ல் மலையாள திரை உலகில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று ஒரு பரபரப்பு எழுந்த நிலையில் நடிகர் டினி டாம் வெளிப்படையாகவே படப்பிடிப்பு தளங்களில் கஞ்சா பயன்படுத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டை முன் வைத்தார். அது மட்டுமல்ல இதனாலேயே தனது மகன் சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்தாலும், அவனை தேடி வாய்ப்புகள் வந்தாலும் கூட இப்படி தவறான பழக்கங்களுக்கு மகன் ஆளாகி விடக்கூடாது என்று தனது மனைவி அவனது சினிமா வருகையை தடுத்து நிறுத்தி வைத்துள்ளார் என்றும் கூறினார்.

அந்த அளவிற்கு தன் மகன் தவறான வழியில் போய் விடக்கூடாது என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த தந்தையின் நம்பிக்கையை தகர்க்கும் விதமாக தற்போது மகன் போதைப் பொருளான கஞ்சாவை பயன்படுத்தி போலீசாரிடம் சிக்கி உள்ளது மலையாள திரை உலகில் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேரள அரசு பஸ் புரமோஷனுக்காக 100வது படத்திற்கு முன்பே மோகன்லாலை இயக்கிய பிரியதர்ஷன்கேரள அரசு பஸ் புரமோஷனுக்காக 100வது ... திலீப் படத்தை இயக்குகிறேனா? 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் மறுப்பு திலீப் படத்தை இயக்குகிறேனா? ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap